
இது வழக்கமான ஆசீர்வாதக் கூட்டமோ, ஜெப முகாமோ அல்ல. கற்றுக்கொள்கிற பாடசாலை. நீங்கள் எதை விசுவாசிக்கின்றீர்களோ, அதை ஏன் விசுவாசிக்கின்றீர்கள்? தேவன் எவைகளை செய்தாரோ, அதை ஏன் அப்படி செய்தார்? பழைய ஏற்பாட்டு தேவனுக்கும், இயேசுவிற்கும் வித்தியாசம் தெரிவது ஏன்? என்பது போன்றவைகளை அறிந்துகொள்ளவும், தோட்டத்தில் நடந்தது என்ன என்பது முதல் கடைசி காலம் என்றால் என்ன என்பது வரை வித்தியாசமான விதத்தில் வேதாகமத்தை புரிந்துகொள்ளவும் இம்முகாமில் பங்குபெறுங்கள்.
Know more
Know more
நாம் நன்றாய் இருப்பதற்கும் இல்லாமல் போவதற்கும் ஒருபோதும் மற்றவர்கள் காரணம் கிடையாது. நாம் நன்றாய் இருப்பதற்கு தேவையான அனைத்து வல்லமையையும் தேவன் நமக்குள்ளே வைத்திருக்கிறார். நம்முடைய சரீரத்தில் உள்ள ஒரு உறுப்பைக்கொண்டு நம் வாழ்க்கையை நாம் விரும்புகிறபடி மாற்றிக்கொள்ள மடியும். அது மிகவும் சிறிய உறுப்பாகிய நாவு என்று வேதம் சொல்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறது என்பதை விளக்குவதே இந்த தொடர் போதனை.
Know more
Know more
உடன்படிக்கையைக் குறித்து சரியாய் அறிந்துகொள்ளாததினால் சபை இழந்தது ஏராளம். அதை அறிந்துகொள்வதின்மூலமே வேதத்தையும், தேவனுடைய சுபாவத்தையும் சரியாய் புரிந்துகொள்ள முடியும். உடன்படிக்கை ஏற்படும்போது பழைய ஏற்பாடு காலத்தில் என்ன செய்தார்கள். அது புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கு இயேசுகிறிஸ்துவின் வழியாக என்ன சிலாக்கியங்களை கொண்டு வந்திருக்கிறது என்பதை விளக்கவதே இந்த தொடர்போதனை.
Know more
Know more